பல வருடங்களுக்குப் பிறகு தனது தந்தையை அம்மாவுடன் சேர்த்து பார்த்த அபிராமி.! சிம்புவே கண் கலங்கிடாரு.. வீடியோவுடன் இதோ.

கிட்டத்தட்ட விஜய் டிவியில் கடந்த ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரசிகர்களின் கோரிக்கையின்படி பிக்பாஸில் நடக்கும் இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்ப வேண்டும் என்று கூறி வந்ததின் காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பி வருகிறார்கள்.

இதற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வரும் நிலையில் கடந்த 5 சீசன்களையும் தொகுத்து வழங்கிய நடிகர் கமலஹாசன் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்ற முடியவில்லை எனவே கமலஹாசனுக்கு பதிலாக தற்போது நடிகர் சிம்பு ஒரு சில வாரங்களாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இவ்வாறு மிக பிரம்மாண்டமாக ஓடிடி வழியாக வெளியாகி இதற்கு முன்பு கடந்த சீசன்களில் டேமேஜான தனது பெயரை காப்பாற்றிக் கொண்டு ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கு என ஒரு நல்ல இமேஜை உருவாக்கி உள்ளார்கள். அந்த வகையில்  கடந்த ஐந்து சீசன்களிலும் கலந்துகொண்ட வனிதா, தாடி பாலாஜி,அபிராமி, தாமரை, ஜூலி, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத்,சுஜா வருணி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷாரிக் அபிநய் மற்றும் சுருதி ஆகியோர்கள் போட்டியாளர்களாக களம் இறங்கினார்கள்.

இவ்வாறு தற்பொழுது பிக்பாஸ் அண்ட்டில் ரசிகர்களை கவர்ந்தவர் அபிராமி.  இவர் தனது முன்னாள் காதலரான நெருப்புடன் இவர் செய்யும் சில சண்டைகள் சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது.அதோடு இவர் பாலாஜி முருகதாஸ்வுடன்  மிகவும் குளோஸ்சாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.  அபிராமி எப்படியாவது இறுதி போட்டியாளர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகிறார்.

இவ்வாறு இறுதி வாரத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கும் நிலையில் தனது அப்பாவை பற்றி பல இடங்களில் கூறி இருந்தார் எனவே அவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் பிக்பாஸ் குழுவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அபிராமியின் அப்பாவை அவளின் வீட்டிற்கு கொண்டு சென்று அபிராமியின் அம்மாவுடன் சேர்த்துள்ளார்கள் இவ்வாறு திடீரென்று தனது அப்பா அம்மாவை ஒன்றாக பார்த்ததும் ஆனந்த கண்ணீர் வர அபிராமியை பார்த்து சிம்புவும் கண் கலங்குகிறார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

Leave a Comment