இன்னும் தாலியே கட்டல அதுக்குள்ள அவசரமா அமீர்-பாவனி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்.!

Amir And Pavni: விரைவில் திருமணம் செய்துக் கொள்ள இருக்கும் பிக்பாஸ் அமீர் – பாவனி  புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் 6 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

7வது சீசன் விரைவில் துவங்க இருக்கிறது இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலர் இருக்கின்றனர். அப்படி ஒவ்வொரு சீசனின் பொழுதும் ஏதாவது ஒரு காதல் கிசு கிசுப்பு எழுவது வழக்கம். அப்படி முடிந்த 5வது சீசனில் காதல் கிசுகிசுப்பில் சிக்கியவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி.

இவர்களுடைய காதல் நிகழ்ச்சிக்குப் பிறகு முறிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆனால் வெளியேறிய பிறகும் இருவரும் ஒன்றாக புரிந்துக் கொண்டு காதலித்து வருகிறார்கள். அப்படி ஜோடியாக இருவரும் துணிவு திரைப்படத்தில் மூன்று நிமிட காட்சியில் நடித்து அசத்தியிருந்தனர்.

amir
amir

இவ்வாறு இருவருமே சினிமாவில் பிஸியாக இருந்து வரும் நிலையில் சென்னையில் ஒரு வீட்டில் லிவிங் டு கெதரியில் வாழ்ந்து வருகிறார்கள். மேலும் ஊர் சுற்றுவதையும் வழக்கமாக வைத்திருக்கும் அமிர் – பவானி புகைப்படங்கள்  மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகுவது வழக்கம்.

amir
amir

மேலும் அடுத்த வருடத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இவர்கள் இணைந்து புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளனர். இது குறித்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.