எங்கள பார்த்தா பாவமா இல்லையா.. பிக் பாஸ் சீசன் 8-ல் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் லிஸ்ட்..

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் இருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இந்த சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது.

அப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் எட்டாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. பிக் பாஸ் எட்டாவது சீசன் மற்ற சீசன்களை விட மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏழு சீசனை கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் இந்த சீசனில் அவர் வெளியேறியிருக்கிறார் என தகவல் வெளியானது.

அதேபோல் இந்த சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி முன் வருவார் எனவும் கூறுகிறார்கள் கமலஹாசனை போல் இல்லாமல் விஜய் சேதுபதி கண்டிப்பாக ரசிகர்களிடம் பெரிய ஆதரவை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் விஜய் தொலைக்காட்சி பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களை பார்த்து பார்த்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்பொழுது ஒரு தோராய லிஸ்ட் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் பல வழக்குகளில் சிக்கிய youtube வாசன் குக் வித் கோமாளியில் புகழ்பெற்ற நடிகை ஷாலின் சோயா, நடிகர் ரியாஸ் கான் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருந்த ஜெகன், பூனம் பஜ்வா என பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் அது மட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளராக இருக்கும் மாகாபா ஆனந்த் இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கிறார்.

மேலும் பாரதி கண்ணம்மா நடிகர் அருண் பிரசாத், பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ரஞ்சித், பிரபல youtube அமலா ஷாஜி, நடிகை ஆனந்தி, ப்ரீத்தி முகுந்தன், சம்யுக்தா என பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இது தோராயமான லிஸ்ட் என்றாலும் இதில் பல பிரபலங்கள் கண்டிப்பாக கலந்து கொள்வார் எனவும் கடைசி நேரத்தில் இதிலிருந்து சில பிரபலங்கள் விலகிக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.