BIGG BOSS 7 : இறுதி கட்டத்தை எட்டிய பிறகு வீட்டை விட்டு வெளியேறும் ரசிகர்கள் மனம் கவர்ந்த இரண்டு போட்டியாளர்கள்.! சம்பள விவரம் இதோ

Bigg Boss 7 : தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 7 இறுதிக் கட்டத்தை நெருங்கி வெற்றிகரமாக பயணித்து வருகின்றனர்.. கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு ஒவ்வொரு வார எமிக்ஷனிலும் ஒரு போட்டியாளர் வெளியேற..

தற்போது டாப் 10 போட்டியாளராக விஷ்ணு, மாயா, பூர்ணிமா, அர்ச்சனா, விஜய் வருமா, நிக்சன், மணிச்சந்திரா, ரவீனா, தினேஷ், விசித்ரா போன்ற போட்டியாளர்கள் இருக்கின்றனர். கடந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களால் முடிந்த எபெக்ட் போட்டு விளையாடினர்.

சொம்பு அடிக்கிறவனை வடிவேலு கூடவே வச்சுப்பாரு.. மறைந்த நடிகர் விவேக் பற்றி வெளிப்படையாக பேசிய கொட்டாச்சி

அர்ச்சனா மற்றும் விஜய் வருமா இருவரும்  நடுவர்களாக இருந்தனர். இதில் விஷ்ணு அதிக பாய்ண்டுகளைப் பெற்று வெற்றி பெற்று முதல் ஃபைனலிஸ்டாக சென்றுள்ளார் விஷ்ணுவிற்கு கமலஹாசன் அந்த டிக்கெட்டை கொடுத்து கவுரவித்தார்.. இந்நிலையில் பிக் பாஸ் பைனல் நிகழ்ச்சிக்கு இன்னும் ரெண்டே வாரம் உள்ளதால் பிக் பாஸ் வீட்டில் அதிக போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

அதனால் அவர்களை வெளியே அனுப்ப இந்த வாரம் டபுள் எவிக்க்ஷன் நடைபெற உள்ளது. அதில் மக்களின் குறைந்த வாக்குகளின் படி இன்று ரவீனா 90 நாட்கள் கழித்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருகிறார். அவரை தொடர்ந்து நிக்சனும் டபுள் எவிக்ஷனில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்..

முதன்முறையாக வெளியான விடாமுயற்சியில் அஜித்-திரிஷா.. வைரலாகும் புகைப்படம்

இதில் ரவீனா ஒரு நாளைக்கு 18 ஆயிரம் என அவர் பிக் பாஸ் வீட்டில் பயணித்த மொத்த நாட்களுக்கும் சேர்த்து 16 லட்சம் வரை சம்பளம் கொடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.. அதேபோல் நிக்சனுக்கும் பிக்பாஸ் வீட்டில் இருந்த 90 நாட்களுக்கும் ஒரு நாளைக்கு 13 ஆயிரம் சம்பளம் என மொத்தமாக 11 லட்சம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. அதிகாரபூர்வமாக சொல்லவில்லை..