இவரை நாமினேட் செஞ்சா பிக் பாஸ் 7 வது சீசனை யார் பார்ப்பா.? நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்கள்.

Bigg boss 7 season : பிக் பாஸ் ஏழாவது சீசன் நேற்று அக்டோபர் 1 ம் தேதி கோலாகலமாக தொடங்கியது இந்த பிக் பாஸ் சீசனில் பதினெட்டு போட்டியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள் அதுமட்டுமில்லாமல் புதிய ரூல்ஸ் இரண்டு வீடு புதிய கேம் என அனைத்தும் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்றைய தினம் ப்ரோமோ வீடியோ வெளியானது அதில் ஆறு போட்டியாளர்கள் மற்றொரு வீட்டிற்கு அனுப்பப்பட்டார்கள் அவர்கள் கேப்டன் அவர்களால் இந்த வீட்டிற்கு அழைக்கப்பட வேண்டும் அதன் பிறகு தான் பிக் பாஸ் உங்களிடம் பேசுவார் என கூறப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் அந்த ஆறு பேருக்கும் பல விதிகள் விதிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் மூன்றாவது புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு நாமினேஷன் பிராசஸ் இருக்கிறது என கூறியுள்ளார். மேலும் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களை நாமினேஷன் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.

அதேபோல் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களை நாமினேஷன் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொருவரும் நாமினேட் செய்கிறார்கள் அந்த வகையில் கூல் சுரேஷ் விஷ்ணு மற்றும் பாவா செல்லத்துறையை நாமினேஷன் செய்கிறார். அதேபோல் ஜோவிகா ஐசுவை நாமினேட் செய்கிறார் ஐஸு ஜோவிகாவை நாமினேட் செய்கிறார் நெக்சன் பிரதீப் ஆண்டனியை நாமினேட் செய்கிறார், பாவா செல்லதுரை கூல் சுரேஷ் நாமினேட் செய்கிறார் யாருமே எதிர்பாக்காத வகையில் பாவா செல்லத்துரை கூல் சுரேஷ்ஷை நாமினேட் செய்துள்ளது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஏனென்றால் பிக் பாஸ் வீட்டில் ரகளை செய்யப்போவது கூல் சுரேஷ் தான் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் திடீரென அவரை நாமினேட் செய்ததால் கூல் சுரேஷ் வெளியே போனால் பிக் பாஸ் யார் பார்ப்பது என கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.