வீடும் புதுசு.. விதியும் புதுசு.. வாங்க விளையாடி பார்க்கலாம்.! வெளியானது பிக் பாஸ் சீசன் 7 புதிய ப்ரோமோ.!

Bigg Boss 7 Promo : பிக் பாஸ் ஏழாவது சீசன் இன்று மாலை ஆறு மணிக்கு தொடங்க இருப்பதால் அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட போகும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் 7 சீசன் இதன் ப்ரோமோ வீடியோ அண்மை காலமாக வெளியாகிக் கொண்டிருக்கிறது அதுமட்டுமில்லாமல் இந்த ப்ரோமோ வீடியோவில் இரண்டு வீடுகள் இருப்பதாக ஏற்கனவே கமல் அறிவித்திருந்தார் இரண்டு வீடுகளில் பிக் பாஸ் போட்டி எப்படி நடைபெறும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள் அதேபோல் தற்பொழுது ரூல்ஸ் புதிதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

பிக் பாஸ் ஏழாவது சீசனில் போட்டியாளர்களாக 20 பேர் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்பட்டது இந்த நிலையில் அப்பாஸ், ரேகா நாயர் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்ட நிலையில் ஆனால் இவர்கள் இருவரும் கலந்து கொள்ளவில்லை என தகவல் கிடைத்தது. அவர்களுக்கு பதில் கூல் சுரேஷ், நடிகர் பப்லு, நடிகை விசித்ரா, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா தேவி, குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா மாடல் நடிகை அனன்யா ராவ் ஆகியவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என கூறபடுகிறது.

அது மட்டுமில்லாமல் பாடகர் யுகேந்திரன் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா சீரியல் நடிகை ரவீனா, விஜி அர்ச்சனா, நடன கலைஞர் விஜய் வர்மா, ரியாஸ் கான் மனைவி நடிகை உமா ரியாஸ், சுழல் வெப் சீரியஸ் நடிகர் ஜான்சன் காமினி, நடிகர் பாலசரவணன், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடித்து வரும் கண்ணன் என்கின்ற சரவணா விக்ரம், விஷ்ணு, நடிகர் சத்யா என 20 பேர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது.

அது மட்டும் இல்லாமல் இந்த லிஸ்டில் கிட்டத்தட்ட உறுதியான பிரபலங்களும் இருக்கிறார்கள் என கூறப்பட்டது இந்த நிலையில் பிக் பாஸ் ஏழாவது சீசன் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் கமலஹாசன் தோன்றும் பொழுது வீடும் புதுசு விதியும் மாறி இருக்கிறது விளையாட்டு மாறப்போகிறது பிக் பாஸ் ஏழாவது சீசன் இன்று மாலை தொடங்குகிறது என கூறியுள்ளார்.

பிக் பாஸ் போட்டி இரண்டு வீடுகளில் நடைபெறுவதால் விதிகள் மற்றும் ரூல்ஸ் மாறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது இதோ இந்த ப்ரோமோ அதனை உறுதி செய்துள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்