தளபதி 67 படத்தில் நடிக்கும் “பிக்பாஸ் 6 பிரபலம்”.. யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போடும்

0
vijay-
vijay-

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று இதுவரை 150 கோடிக்கு மேல் வசூல் அள்ளி ஓடிக்கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் விஜய் தளபதி 67 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். தளபதி 67 படம் ஒரு கேங்ஸ்டர்   படமாக உருவாகி வருகிறதாம். அதில் விஜயுடன் கைகோர்த்து கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின் போன்ற பல நட்சத்திரங்கள் தளபதி 67 படத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் படக்குழு இதுவரை உறுதியாக அறிவிக்கவில்லை.

இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு புதிய தகவல் கசிந்துள்ளது அதாவது தளபதி 67 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிக் பாஸ் சீசன் 6 பிரபலம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல இலங்கைப் பெண்ணான ஜனனி தான் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.

ஜனனி பிக்பாஸ் வீட்டில் இருந்த பொழுது அவருக்கு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும் அவரால் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை பெற முடியவில்லை வெளியே வந்த அவருக்கு தற்பொழுது தளபதி 67 படத்தின் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் செம்ம சந்தோஷத்தில் இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.

janani
janani

இருப்பினும் தளபதி 67 திரைப்படத்தில் நடிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை ஆனால் வெகு விரைவிலேயே வரும் என சொல்லப்படுகிறது லாஸ்லியாவை போல இவருக்கும் பட வாய்ப்பு கிடைத்துள்ளதால் இவருடைய எதிர்காலமும் சிறப்பாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.