பிக் பாஸ் சீசன் 5 இல் முட்டி மோதிக்கொள்ளும் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? இதோ முழு லிஸ்ட்

ஒவ்வொரு தொலைக்காட்சிகளும் டி ஆர் பி இல் முதல் இடம் பிடிப்பதற்காக புதிய புதிய சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் என ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் கடந்த நான்கு வருடங்களாக விஜய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி டி ஆர் பி-யில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்கிறார்கள்.

அந்தவகையில் இந்த வருடம் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் அக்டோபர் 3-ஆம் தேதியிலிருந்து வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த சீசனில் பதினெட்டு போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்  அவர்களில் ஒருவர்தான் நமிதா மாரிமுத்து இந்த பிக்பாஸ் சீஸனில் முதன்முறையாக திருநங்கை கலந்து கொண்டுள்ளார்.

ஆனால் சில தவிர்க்க முடியாத சூழ்நிலையால் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நாட்யா சாங் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். மேலும் மீதமுள்ள போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் தங்களுக்கான டாஸ்க்கை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த வாரம் யார் வெளியே போகப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது.

அப்படி இருக்கும் வகையில் அபிஷேக் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் அபிஷேக் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்றால் பிக் பாஸ் வீட்டில் அடுத்ததாக யார் பரபரப்பாக கொண்டு செல்வார் என்று எதிர்பார்ப்பா அனைவரிடம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் கலந்து கொண்டுள்ள 18 போட்டியாளர்கள் ஒரு வாரத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதில் இசைவாணி ஒரு லட்ச ரூபாய், ஜெயமோகன் 1.5 லட்சம் ரூபாய், மதுமிதா 2.5 லட்சம் ரூபாய், அபிஷேக் ராஜா 1.75 லட்சம் ரூபாய், நமிதா மாரிமுத்து 1.75 லட்சம், பிரியங்கா 2 லட்சம், அபினை 2.75 லட்சம், பவானி ரெட்டி 1.25 லட்சம், சின்ன பொண்ணு 1.5 லட்சம், நாட்டிய சாங் 2 லட்சம், வருண் 1.25 இலட்சம், இமான் அண்ணாச்சி 1.75 லட்சம், அக்ஷரா ரெட்டி ஒரு லட்சம், சுருதி 70 ஆயிரம், ஐக்கி பெர்ரி 70 ஆயிரம், தாமரைச்செல்வி 70 ஆயிரம், சிபி 70 ஆயிரம், நிருப் 70 ஆயிரம்.

என பல போட்டியாளர்கள் அவர்கள் வாங்கும் சம்பள பட்டியல் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

Leave a Comment