அமீர் கொடுத்த முத்தம்லாம் சும்மா ஆனா பாவனி கொடுத்த முத்தம் செம கிக்கு.!

விஜய் டிவியில் கிட்டதட்ட ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ஆதரவு கிடைத்து வருவதால் மிகவும் வெற்றிகரமாக தமிழில் பிக்பாஸ் சீசன் 5 சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. அதில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து உள்ளனர்.அதேபோல நிகழ்ச்சி முடிந்த பிறகு அனைத்து போட்டியாளர்களும் நியூஸ் சேனல்களுக்கு பேட்டி அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சில சீரியல்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியவர் தான் நடிகை பாவனி. இவர் சின்னத்தம்பி என்ற சீரியலில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதன்பிறகு பெரிதாக சீரியல்களில் நடிக்காமல் இருந்து வருகிறார் இவர் வாழ்க்கையில் நடந்த பல துக்கமான விஷயங்களை பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கூறி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5-தில் மிகவும் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடியாக அமீர் மற்றும் பவானி இருவரும் திகழ்ந்தனர். இவர்களின் ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனதால் இவர்களுக்கென்று தனி ஒரு ஆர்மி உருவாகிவுள்ளது. எனவே ரசிகர்கள் பாவனி மற்றும் அமீர் இருவருக்கும் திருமணம் ஆனால் மிகவும் நன்றாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.

அமீர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ்  வீட்டிற்கு அறிமுகமானார் வந்த நாளிலிருந்தே பாவனிடம் அதிகம் பேசுவது போன்றவற்றை செய்ததால் ஆரம்பத்தில் நெகட்டிவ் கமெண்டுகளை பெற்றார்.பிறகு சக போட்டியாளர்களின் குடும்பத்தினர்கள் வீட்டிற்கு வரும் பொழுது அவர்கள் கூறுவதை வைத்து இது நெகட்டிவாக போகிறது என்பதை தெரிந்து கொண்டு உஷாராக விளையாட ஆரம்பித்தார்.

அந்த வகையில் தனது சிறந்த விளையாட்டு திறமையினால் ஃபர்ஸ்ட் பைனல் லிஸ்ட் பட்டத்தையும் பெற்றார். இப்படிப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சியில் பாவனிடம் அமீர் தனது காதலியை கூறிய பிறகும் பவானி அதனை பற்றி பெரிதாக பேசாமல் அமீர் மீது கோபம் படாமல் தனது நண்பனாக மட்டுமே பார்த்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் சமீப பேட்டி ஒன்றில் பவானி பிக்பாஸ் நிகழ்ச்சி தனக்கு நிறைய உறவுகளை தந்துள்ளது.அதில் அமீரும் ஒருவர். என் முகத்திற்கு நேராகவே என்னை கல்யாணம் செய்து கொள்கிறாயா என்று கேட்ட ஜென்டில்மேன். ஆனால் எனக்கு அந்த உறவில் விருப்பமில்லை என்று அப்பொழுதே சொல்லிவிட்டேன்.

இப்படிப்பட்ட நிலையில் அவர் எனக்கு கொடுத்த முத்தம் மட்டும் வெளியில் தவறாக போயுள்ளது.ஆனால் நான் நிருப்புக்கும் கூட முத்தம் கொடுத்து இருக்கிறேன் ஆனால் அதனை எடிட்டிங் செய்துள்ளனர். ஏனென்றால் உங்களுக்கு காட்டியிருக்கும் ஒரு மணி நேரத்திற்கு பிறகு நடக்கும் 23 மணிநேரம் காட்சிகள் பெரும்பாலும் மறைக்கப்பட்டுவிடும்.

அதிலும் முக்கியமாக இந்த ஒரு மணி நேர நிகழ்ச்சியில் அமீர் பெரும்பாலும் என்னுடன் இருப்பது போல காட்டப்பட்டு இருக்கிறது ஆனால் பெரும்பாலும் என்னுடன் இருக்க மாட்டான் எப்ப பார்த்தாலும் ராஜிவுடன் சுத்திக் கொண்டே இருப்பான். இவ்வாறு பாவனி அமீருக்கும் தனக்கும் எப்படிப்பட்ட உறவு என்பதை தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார்.

Leave a Comment