பிக்பாஸ் நான்காவது சீசனை தட்டி தூக்கப் போகும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.? தொகுப்பாளர் யார் தெரியுமா.?

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது, இதில் முதல் 3 சீசன்களை மிகவும் வெற்றிகரமாக விஜய் தொலைக்காட்சி நடத்தி முடித்தது, இந்த அனைத்து சீசன் களையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார், இதற்காக கமல்ஹாசனுக்கு கோடிகளில் சம்பளம் வழங்கப்பட்டது என கூறுகிறார்கள்.

இந்தநிலையில் பிக்பாஸ் நான்காவது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் இந்த நான்காவது சீசனை கமல் தொகுத்து வழங்கப் போவதில்லை என்ற செய்தி ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஏனென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சி ஈவிபி ஸ்டுடியோவில் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்தது.

இந்தியன் 2 படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் கம்பி அறுந்து விழுந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் சினிமா பிரபலங்கள் இடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் சினிமா பிரபலங்களை உலுக்கி எடுத்தது, அதனால் நடிகர் கமலஹாசனின் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடிக்கப்போவதில்லை என தெரிவித்திருந்தார், ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் செட் அந்த ஸ்டூடியோவில் தான் இதுவரை போட்டுள்ளார்கள், அதனால் இனி கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 4 நடத்துவதற்கே விஜய் தொலைக்காட்சி மற்றும் கலர் தொலைக்காட்சிகளுக்கு இடையே மிகப்பெரிய போட்டி நடைபெறுகிறது, இப்படியிருக்க ஏற்கனவே டிவியில் சன் தொலைக்காட்சி முதலிடத்தில் இருக்கிறது, இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் வைத்து தங்களது டிஆர்பி ஏற்றிக்கொண்ட விஜய் தொலைக்காட்சி இந்த நிகழ்ச்சியும் கையை விட்டுப் போய்விட்டால் கூட்டம் குறைந்து விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இந்நிலையில் இந்த சீசனை நடத்துவதற்கு விஜய் தொலைக்காட்சி ஏற்கனவே போட்டியாளர்களை தேர்வு செய்யும் வேட்டையில் இறங்கி விட்டதாகவும் தொகுத்து வழங்குவதற்காக நடிகர் சிம்புவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இந்த சீசனை கமல் தொகுத்து வழங்குவாரா மாட்டாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

bigg boss4
bigg boss4

Leave a Comment