பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் பற்றிய அறிவிப்பை அதிரடியாக வெளியிட்ட விஜய் தொலைக்காட்சி.!

0

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது, இந்த வருடமும்  பிக் பாஸ் சீசன் 4 விரைவில் தொடங்க இருக்கிறது, அதனால் விஜய் தொலைக்காட்சி பல புரமோஷன் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 4 ல் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களை பற்றி ரகசியங்கள் கசியத் தொடங்கி விட்டன, இந்த சீசனில் இடுப்பு மடிப்பு நடிகை ரம்யா பாண்டியன், சுனைனா உள்ளிட்டோர் இந்த முறை கலந்து கொள்ள இருக்கிறார்கள் என தகவல் வெளியாகின.

ஆனால் அந்த தகவலை இருவரும் மறுத்தார்கள், இந்த நிலையில் இரண்டாம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 4 ல் கலந்து கொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் யார் என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள் என விஜய் தொலைக்காட்சி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நேயர்களின் யூகிப்பு சரியாக இருக்கிறதா என பார்க்கலாம் என அறிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் ஒவ்வொரு பிக்பாஸ் ரசிகர்களும் ஒவ்வொரு போட்டியாளர்களை பெயரை கமெண்டில் பதிவிட்டு வருகிறார்கள், இவர்கள் யார் என்பதை விரைவில் விஜய் தொலைக்காட்சி அறிவிக்க இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த சீசனில் டைசன் பட வில்லன் நடிகர் பாலாஜி முருகதாஸ் சனம் ஷெட்டி, ரியோ ராஜ், ஷாலு ஷம்மு, அம்ரிதா ஐயர் ஆகியோர்கள் கலந்து கொள்ள இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் விஜய் தொலைக்காட்சி போட்டியாளர்களை கண்டுபிடியுங்கள் என அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு ஒரே குஷியாக இருக்கிறது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் போட்டியாளர்களின் அதிகாரபூர்வ பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.