பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 31 நாட்களுக்கு மேல் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது, இந்த நிகழ்ச்சியை கமல்தான் தொகுத்து வழங்கி வருகிறார் பிக் பாஸ் வீட்டில் வனிதா போனதிலிருந்து எந்த ஒரு பெரிய சண்டையும் இது வரை நடைபெற்றது இல்லை ஆனால் மீராவல் தற்போது பூகம்பம் வெடித்தது வருகிறது பிக்பாஸ் வீட்டில்.
அதாவது பிக் பாஸ் வீட்டில் நாட்டாமை டாஸ்க் தற்பொழுது போய்க்கொண்டிருக்கிறது, இந்த டாஸ்க்கின் பொழுது சேரன் தனது இடுப்பை பிடித்து தூக்கி தள்ளினார் என போட்டியாளர்கள் அனைவரும் முன்பும் கூறி சேரனை அவமானப்படுத்தினார்.
இதனால் சேரன் மிகவும் மனம் உடைந்து நான் அவ்வாறு செய்யவில்லை எனக்கு பெண் குழந்தை இருக்கிறது அவர்களுக்கு திருமணம் செய்ய வேண்டும், இதுபோல் கூறி என் வாழ்க்கையை கெடுத்து விடாதே ஒருவேளை அப்படி செய்திருந்தால் என்னை மன்னித்துவிடு என அனைவரும் முன்பும் கூறி அழுதார்.
இவர் இவ்வாறு கூறியதை பார்த்து அனைத்து போட்டியாளர்களும் சேரனுக்கு ஆதரவாக பேசினார்கள் உடனே மீராவும் நான் அதுபோல் சொல்லவே இல்லையே என அந்தர் பல்டி அடித்தார், இதைக் கேட்ட முகேனுக்கு செம கோவம் வந்து விட்டது ஏதோ அசிங்கமாக பேச வந்து பின்பு அமைதியாகி விட்டார் இந்த செயலை பார்த்த பார்வையாளர்கள் அனைவரும் முகேனை பாராட்டுகிறார்கள்.
Mugen on ? ??????#BiggBossTamil3 #mugenrao #abiramiiyer #Abirami pic.twitter.com/Dgo41A9BkO
— ABI ? MUGEN ? (@Abi_Mugen_army) July 25, 2019
அது மட்டுமில்லாமல் ரசிகர்கள் மீரா மிதுன் மற்றொருவருடன் இடுப்பை பிடித்து நடனமாடும் புகைப்படத்தை வெளியிட்டு இது மட்டும் தப்பு இல்லையா என வெளுத்து வாங்கி வருகிறார்கள் ரசிகர்கள்.
