அபிராமியை கண்ணீர் வர வர அழவைத்த ஜாங்கிரி மதுமிதா.! வைரலாகும் வீடியோ

0
madhumitha
madhumitha

பிக் பாஸ் முதல் சீசன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த வருடம் மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது, இந்த நிகழ்ச்சியும் கமல்தான் தொகுத்து வழங்குகிறார், நிகழ்ச்சியில் இன்னும் காதல் மலரவில்லை இப்போதுதான் சண்டைகள் பிரச்சனைகள் ஆரம்பித்துள்ளன, இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை மிகவும் அதிகமாக கவர்ந்தவர் லொஸ்லின். மேலும் நேற்றைய நிகழ்ச்சியில் கவின் லொஸ்லின் ரூட் விட்டார் இதனை போட்டியாளர்கள் முதல் ரசிகர்கள் வரை கிண்டல் அடித்தார்கள்.

இந்த நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோவில் ஜாங்கிரி மதுமிதா நானும் தமிழ் பொண்ணுதான் எனக் கூறுகிறார், இதனை பார்த்த சக போட்டியாளர்கள் குறிப்பாக அபிராமி இதில் எங்க தமிழ் பொண்ணு வராங்க எனக் கேட்க அதற்கு மதுமிதா எங்க வீட்ல இதெல்லாம் அட்வைஸ் பண்ணிக்க மாட்டாங்க எனக் கூறுகிறார்.

இப்படியே சண்டை அதிகமாக இதனை கேமரா மூலம் கமல் பார்த்துக் கொண்டிருக்கிறார், அடுத்த ப்ரோமோ வீடியோவில் ஜாங்கிரி மதுமிதா கண் கலங்குகிறார் அதேபோல் அபிராமியும் கண்கலங்குகிறார் இதனை பார்த்த கமல் மதுமிதா விளையாடுறீங்களா எனக் கேட்கிறார், இந்த புரோமோ வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.