பிக்பாஸில் கலந்துகொண்டுள்ள இலங்கை பெண் லொஸ்லியாவுக்கு தமிழ் சினிமாவில் இவரைத்தான் பிடிக்குமாம்.!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது, இதுவரை இந்த நிகழ்ச்சியில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் கலகலப்பாக போய்க்கொண்டிருக்கிறது. மேலும் பிக் பாஸ் சீசன் 3-ல் 16 போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த சீசனில் செய்திவாசிப்பாளரும் இலங்கை பெண்ணுமான லொஸ்லியா கலந்து கொண்டுள்ளார், இவருக்கு செய்தி வாசிப்பாளராக இருந்த பொழுது பல ரசிகர்கள் இருந்தார்கள் இந்த நிலையில் தற்போது பிக்பாஸில் கலந்து கொண்டதால் இன்னும் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார்.

இவருக்கு தற்போது சமூகவலைதளத்தில் ஆர்மியை தொடங்கிவிட்டார்கள், அதனால் இவரை பற்றிய தகவல் என்ன என்பதை ஆராய்ந்து வருகிறார்கள் ரசிகர்கள், இந்த நிலையில் இவருக்கு தமிழ் சினிமாவில் எந்த நடிகரை பிடிக்கும் என சமீபத்தில் இவரின் தோழி கூறியுள்ளார்.

இவருக்கு தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோர்களை பிடிக்குமாம், ஆனால் all time favorite எப்பொழுதும் ரஜினி தான் எனக் கூறியுள்ளார்.