பிக்பாஸ் வீட்டில் நுழைய போகிறாரா பிரபல நடிகர்.? வைரலாகும் கிரிக்கெட் வீரரின் ட்வீட்

0
biggboss
biggboss

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் 3 சீசன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது, பிக்பாஸில் பல போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டார்கள், அதனால் பிக்பாஸ் வீட்டில் புதிதாக யாராவது உள்ளே வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் காமெடி நடிகர் சதீஷ் பிக் பாஸ் வீட்டிற்குள் வரப்போகிறார் என்ற கிசுகிசு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது, சமீபத்தில் காமெடி நடிகர் சதீஷ் லேட்டஸ்டாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரசிகர்களுக்காக பதிவுசெய்தார், அதனைப் பார்த்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் பிக்பாஸில் கலந்து கொள்ள போகிறீர்களா என கேள்வி கேட்டார்.

பதிலளித்த சதீஷ் இல்லை நான் ஆசிரமம் ஆரம்பிக்கப் போகிறேன் எனக் கூறினார். மேலும் இவர்களின் கலந்துரையாடலை பார்த்த ரசிகர்கள், பிக்பாஸ் வீட்டில் வனிதா இருக்கிறார் அங்கு அதிகமாக சண்டை தான் இருக்கிறது அதனால் போக வேண்டாம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.