தர்ஷன் சட்டையில் முத்தத்தால் லிப்ஸ்டிக் கரை கிண்டலடிக்கும் லொஸ்லியா.! நீக்கப்பட்ட காட்சி இதோ

0
darshan
darshan

பிக்பாஸ் முதல் சீசனை போல் மூன்றாவது சீசனும் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது, முதல் சீசனில் மருத்துவ முத்தம் மிகவும் பிரபலமானது, இதை பல ரசிகர்களும் பிரபலமாக பேசினார்கள். அதேபோல் இரண்டாவது சீசனில் சிலர் முகம் சுழிக்கும் அளவிற்கு நடந்து கொண்டார்கள், இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில் மூன்றாவது சீசனிலும் காதல், சண்டைகள், நட்பு என அனைத்தும் வரத் தொடங்கிவிட்டன, இதில் காதலில் பலர் சிக்கி வருகிறார்கள் என்ன நடக்கும் என்று கடைசிவரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், நேற்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் இருந்து டெலிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது,.

அந்த வீடியோவில் தர்ஷன் சட்டையில் லிப்ஸ்டிக் காரை ஒட்டி உள்ளது, இதைப்பார்த்த சக  போட்டியாளர்கள் தர்ஷனை கிண்டல் செய்கிறார்கள், அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவருக்கும் பிடித்த லொஸ்லியாவும் கலாய்த்துள்ளார், இதற்கு தர்ஷன் விளையாடும்போது வந்து விட்டது என காரணம் கூறுகிறார் இதோ வைரலாகும் வீடியோ