லொஸ்லியாவை ஓரம்கட்ட 17ஆவது போட்டியாளராக களமிறங்கும் ரசிகர்களுக்கு பிடித்த சீரியல் நடிகை

0
losliya
losliya

பிக்பாஸில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களாக இருந்தவர் வனிதா ஆனால் இவர் வெளியேறிய பிறகு பிக் பாஸ் வீட்டில் எந்த ஒரு சண்டையும் இதுவரை நடைபெறவில்லை, இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு மூலம் புதிய போட்டியாளர் களம் இறங்கி இருக்கிறார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலில் 15 போட்டியாளர்கள் தான் கலந்து கொண்டார்கள் அதன்பின் வைல்ட் கார்ட் மூலம் மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டில் நுழைந்தார், தற்பொழுது பாத்திமா மற்றும் வனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டதால் 15 போட்டியாளர்கள் மட்டுமே தற்போது இருக்கிறார்கள், இந்த நிலையில் இந்த வாரம் யார் வெளியே செல்ல இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது, மேலும் 17வது போட்டியாளர்களாக சங்கிதா தான் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் முதலில் கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால் சங்கீதாவின் கணவர் கிருஷ் சங்கீதா பிக்பாஸில் கலந்து கொள்ள மாட்டார் என கூறினார், அதேபோல் இவர் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என கூறினார், இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி பிக்பாஸ் வீட்டில் 17வது போட்டியாளர்களாக ஆல்யா மானசா  கலந்து கொள்ள இருக்கிறார். என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது ஏனென்றால் ராஜா ராணி சீரியல் முடிவடைய இருப்பதால் இவர் தான் கலந்து கொள்ள இருக்கிறார் என்று அனைவரும் கூறுகிறார்கள்.

ஆல்யா மானசா கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் அதன் பின்பு விஜய் தொலைக்காட்சியில்  ராஜா ராணி சீரியல் மூலம் செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர், மேலும் ஷாலு சம்மு சமீபத்தில் ஒரு பேட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 17வது போட்டியாளராக ஆல்யா மானசா தான் கலந்து கொள்வார் என அடித்துக் கூறினார். ஆல்யா மானசா கலந்துகொண்டால் லொஸ்லியா அவருக்கு மிகப் பெரிய போட்டியாக இருப்பார் என எதிர்பார்க்கபடுகிறது.