பிக்பாஸ் 3 -ல் கலந்துகொண்டுள்ள பாபி சிம்ஹாவின் சகோதரி.! யார் தெரியுமா அது.?

0
Bobby-Simha
Bobby-Simha

விஜய் தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள், அதில் ஒருவர் ரேஷ்மா, இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் சூரியுடன் இணைந்து புஸ்பா புருஷன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார்.

இவர் பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டுள்ளார் தனது வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களை அனைவரிடமும் கூறினார், இவர் இரண்டு திருமணம் செய்து கொண்டு இருவரிடமும் ஏமாந்து விட்டதாகவும் தன்னுடைய 9 மாத குழந்தையை பறிகொடுத்த விட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இவர் யார் என்ற விவரம் தற்போது தெரிய வந்துள்ளது, ரேஷ்மா பாபி சிம்ஹாவின் சகோதரி என தற்போது தகவல் தெரியவந்துள்ளது, இந்த தகவலை தெரிந்து கொண்ட ரசிகர்களை வியப்பில் இருக்கிறார்கள்