பிக் பாஸ் முகேன் ராவ் நடிக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!! ஹீரோயின் இவுங்களா…

0

bigboss mugenrao vetri movie first look poster: விஜய் டிவியில் வருடம் வருடம் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பலரது வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது. அந்த வகையில் பாடகராக தொடங்கி தற்போது திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததுள்ளது.

முகேன் இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிற்கு முன்பு இவர் ஆல்பம் பாடல்களில் நடிப்பது மற்றும் பாடல்களை பாடுவது போன்ற சிறிய முயற்சிகளை செய்து வந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு தற்போது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் தமிழ் திரைப்படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளதாகவும் இதனை பற்றி அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் தற்போது முகேன் ராவ் நடிக்கும் வெற்றி திரைபடத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் வெளியானது. இத்திரைப்படத்தை ஸ்ரீடி புரோடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் இத்திரைப்படத்தினை வெப்பம் திரைப்படத்தை இயக்கிய அஞ்சனா அலிகான் இயக்குவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து முகேனின் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் முகேனுக்கு  பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

anukreethy_vas_
anukreethy_vas_
anukreethy_vas_2
anukreethy_vas_2