முகம் முழுவதும் காயங்களுடன் பிக்பாஸ் ஜூலி.! ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த வீடியோ

0

biggboss julie video:ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமாகி அதன்மூலம் பிக்பாஸ் சீசன் ஒன்னில் அறிமுகமாகி பலர் வெறுக்கக்கூடிய நபர்களில் ஒருவரானவர்  ஜூலி. சமீபத்தில் உத்திர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து அவரின் நாக்கை அறுத்து முதுகு தண்டை ஓடித்து மிகவும் கொடூரமாக நடந்து கொண்ட விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே.

அதனைத் தொடர்ந்து அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அவரின் பெற்றோர்கள் உடலை வாங்கிக் கொள்ள முடியாது என போலீசாரிடம் கூறியும் மருத்துவமனையில் இருந்த அவரின் உடலை எடுத்துச் சென்று போலீசாரே எரித்து விட்டனர்.

கீழ்ஜாதி பெண் என்பதால் கேட்க பெரிதாக யாரும் இருக்கமாட்டார்கள் என போலீசார் அவரது உடலை எரித்து விட்டனர். தற்ப்போது இந்த பிரச்சனை பெரிய அளவில் போய்க்கொண்டிருக்கிறது.

ஜூலி  சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர். இவர் தொடர்ந்து தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பிறப்பில் ஜாதி பார்ப்பவர்கள் பிறப்புறுப்பில் ஜாதி பார்ப்பதில்லையே என கூறி உள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.