இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் – மாடல் அழகி.? என்னடா தலைவிக்கு வந்த சோதனை..

0
bigboss ultimate
bigboss ultimate

தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழில் தற்போது பிக் பாஸ் 5 சீசன்கள் வரை நிறைவடைந்த நிலையில் இதைத் தொடர்ந்து 6வது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்த்த நிலையில் வழக்கத்திற்கு மாறாக ஓடிடி தளமான ஹாட்ஸ்டார் யில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலரே பிக்பாஸ் அல்டிமேட்டிலும் கலந்துகொண்டனர். மேலும் போட்டி ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி சிறப்பாக நடந்து வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார் ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேறியதை..

அடுத்து தற்போது சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டது. ஒரு பணப்பெட்டியில் குறிப்பிட்ட தொகையை வைத்து யார் வேண்டுமானாலும் இதை எடுத்துக் கொண்டு வெளியேறலாம் என பிக்பாஸ் கூறியிருந்தார்.

ஆரம்பத்தில் பலரும் இந்த பணத்தை எடுக்க முன்வராத நிலையில் பணத்தொகை கொஞ்சம் அதிகரித்த நிலையில் பணபெட்டிக்கு சிலர் போட்டி போட்டனர். அப்படி கடைசியாக சுருதி மற்றும் ஜூலி இருவருக்கும் பல டாஸ்க்குகள் வைத்து அந்த போட்டியில் வென்றவருக்கு இந்த பணத்தை கொடுக்கப்பட்டன அப்படி இன்று பிக்பாஸ் வீட்டில் கடுமையான டாஸ்க்குகளை வென்று..

abirami
abirami

15 லட்சம் பண பெட்டியுடன் சுருதி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் இந்த வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற அபிராமிக்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.