புதிய கடைக்கு ஓனரான பிக்பாஸ் வேல்முருகன் – கடையை திறந்து யார் தெரியுமா.! வெளியான புகைப்படம்.

velmurugan
velmurugan

தமிழ் சினிமாவில் பலவிதமான பாடல்கள் இருந்தாலும் கானா பாடலுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளன.  ஒரு கட்டத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே கானா பாடல்கள் ஒலித்த நிலையில் தற்பொழுது தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் கானா பாட்டு முக்கிய இடத்தை பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக கானா பாடலுக்கு பெயர் போனவர் பாடகர் வேல்முருகன்.

இவர் நாடோடிகள் படத்தில் ஆடுங்கடா பாடல்,  ஆடுகளம் படத்தில் ஒத்த சொல்லால, ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் வேணாம் மச்சான் வேணாம் போன்ற பல்வேறு  சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து உள்ளார். இப்படி கானா துறையில் சிறப்பாக ஓடிக்கொண்டிருந்த வேல்முருகனுக்கு ஒரு கட்டத்தில் இவருக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியில் அவர் பல பாடல்களை பாடி மக்களை என்டர்டைமெண்ட்  செய்தார். இருந்தும் இந்த நிகழ்ச்சியில் இவர் நீண்ட நாள் நீடிக்கவில்லை. பின்பு விஜய் டிவி தொலைக்காட்சியிலே மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் அவரது மனைவியுடன் கலந்து கொண்டு மாஸ் காட்டினார்.

மேலும் இவர் சினிமா துறையில் பல பாடல்களைப் பாடி  மாபெரும் விருதுகளையும் பெற்றுள்ளார். இப்படி வெள்ளித்திரையில் வளர்ந்து கொண்டிருக்கும் இவர் தற்பொழுது புதிதாக கடை ஒன்றை திறந்துள்ளார். அந்த கடை திறப்பு விழாவிற்கு இசையமைப்பாளர் நடிகர் மற்றும் பாடகருமான ஜிவி பிரகாஷ்ஷை அழைத்துள்ளார்.

வேல்முருகனின் புதிய கடையை ஜிவி பிரகாஷ் திறந்து வைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. மேலும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வேல்முருகனுக்கு  வாழ்த்து கூறி வருகின்றனர்.

velmurugan
velmurugan