பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் இவரா.?

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வருகின்றன இதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியிலிருந்து வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேறுவார்.

அப்படி அடுத்தடுத்த வாரங்களில் புது புது டாஸ்குகளில் சிறப்பாக பயணித்து வருகின்றனர். மேலும் இந்த வாரம் இந்த நிகழ்ச்சியிலிருந்து சுரேஷ் சக்கரவர்த்தி உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு பிக்பாஸ் இடம் அனுமதி பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

அதைத் தொடர்ந்த இந்த வாரம் புது பிரபலங்களாக கே பி ஒய் தீனா மற்றும் சாண்டி மாஸ்டர் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இவர்களது லூட்டி மக்கள் பலருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளனர். பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் மக்கள் என அனைவரையும் தீனா மற்றும் சாண்டி மாஸ்டர் மகிழ்ச்சியாக வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் மக்களின் குறைந்த வாக்குகளின் படி வெளியேறி வருகின்ற நிலையில் இந்த வார வாக்குகளின் படி பாலா அதிக ஓட்டுக்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். கடைசி இடத்தில் மக்களின் குறைந்த வாக்குகளை பெற்று அபிராமி மற்றும் சதீஷ் இருவரும் உள்ளனர்.

இவர்கள் இருவரில் இதுவரை போட்டியாளர்கள் மற்றும் மக்களிடையே சுவாரசியம் குறைந்து விளையாடி வருபவர் சதீஷ் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே அதனால் எப்படியும் இந்த வாரம் சதீஷ் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.

Leave a Comment