பிக்பாஸ் சீசன் 5 : பிரபலம் நடிகர் தனுஷுடன் இரண்டு படத்தில் நடித்த போட்டியாளர் – யார் தெரியுமா.?

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை உலா நாயகன் கமலஹாசன் பல்வேறு தடைகளைத் தாண்டி சீரும் சிறப்புமாக தொகுத்து வழங்கிவருகிறார் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களும் மற்ற சீசன்களை விட வித்தியாசமாக விளையாடுவதால் ரசிகர்கள் கண்களுக்கு புதுவிதமாக தெரிகிறது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை பல்வேறு பிரபலங்கள் வெளியேறி இருந்தாலும் இப்பொழுது இருக்கின்ற பிரபலங்கள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தது இல்லை என்பதால் இனி பிக்பாஸ் வீட்டில் போர்க்களம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போ பிக் பாஸ் வீட்டில் ராஜு, பிரியங்கா, இமான் அண்ணாச்சி, சஞ்சீவ், வருண், சிபி, தாமரை, பாவனி, அக்ஷரா, அபினய், நிரூப், அமீர் போன்றவர்கள் இருக்கின்றனர்.  பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் பலரும் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் தனுஷ் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மட்டுமல்லாமல் தொடர்ந்து நடித்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 5 – ல் போட்டியாளர் ஒருவர் நடிகர் தனுஷுடன் இரண்டு முறை படங்களில் நடித்து உள்ளார் என்ற தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

ஆம் அந்த நபர் வேறு யாருமல்ல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் சிறப்பாக பயணித்து வரும். நம்ம இமான் அண்ணாச்சி தான் தனுஷுடன் இரண்டு முறை நடித்துள்ளாராம் மரியான் மற்றும் நய்யாண்டி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

dhanush-and-bigboss

Leave a Comment

Exit mobile version