பிக்பாஸ் சீசன் 5 : வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை பார்க்க வரும் குடும்பத்தினர் – யார் யார் தெரியுமா.? வெளியே கசிந்த தகவல்.

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் மேலும் போட்டியின் இடையில்  வைல்டு கார்டு என்ட்ரியாக மூன்று நபர்களும் கலந்து கொண்டனர்.

தற்போது இந்த நிகழ்ச்சியில் பத்து போட்டியாளர்கள் எலிமினேஷனில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது மீதம் 10 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டினுள் சிறப்பாக விளையாடி வருகின்றன. இதில் சென்ற வாரம்  சற்றும் யாரும் எதிர்பார்க்காத வகையில் அபிநய் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். மேலும் இந்த நிகழ்ச்சி தற்போது 70 நாட்களைக் கடந்துள்ளன.

இன்னும் 4 வாரங்களே உள்ளன. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருவதால் வரும் வாரங்களில் பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டினுள் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை அடுத்து பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 10 போட்டியாளர்களின் உறவினர்களும் ஒவ்வொரு நாளாக பிக்பாஸ் வீட்டினுள் வருகை புரிய உள்ளனர்.

தற்போது பிக்பாஸ் வீட்டினுள் வர இருக்கும் போட்டியாளர்களின் உறவினர்கள் லிஸ்ட் இணையதளத்தில் வெளியாகி உள்ளது . இனி பிக்பாஸ் வீட்டில் நடக்க இருக்கும் ஃப்ரீஸ் டாஸ்கில் சிபியின் மனைவி பிக்பாஸ் வீட்டிற்கு வர உள்ளார் மேலும் ராஜுவின் மனைவி அல்லது நண்பரும் வர உள்ளாராம் மேலும் பிரியங்காவின் அம்மா மற்றும் சகோதரர் வர உள்ளனர்.

சஞ்சீவ் அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வர உள்ளார் தாமரையின் மாமியார் பிக்பாஸ் வீட்டிற்கு வர உள்ளார் மேலும் அக்ஷராவின் சகோதரர் மற்றும் நிரூப் மற்றும் வருணின் பெற்றோர்கள் மேலும் பாவனியின் அம்மா மற்றும் சகோதரி மற்றும் அமீரின் நண்பர் போன்றோரும் பிக்பாஸ் வீட்டிற்கு வர உள்ளார்கள்.  இதோ அந்த லிஸ்ட்.

bigboss
bigboss

Leave a Comment