சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிக்பாஸ் சீசன் 5 பிரபலம்.! உள்ள போனதுக்கே பட வாய்ப்பா.. வெளிய வந்தா ஏகப்பட்ட வாய்ப்பு கிடைக்கும் போல..

ton
ton

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவரது கையில் பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன அந்த வகையில் டான், அயலான் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன. சமீபத்தில் கூட இவர் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படம் வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்தை நெல்சன் திலிப்குமார் சிறப்பாக எடுத்துள்ளார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த திரைப்படமாக இருந்தாலும் ஒரு சில சிறப்பான கருத்தை எடுத்து கொடுத்துள்ளதால் படம் வெற்றி நடை கண்டு வருகிறது. மேலும் படத்தை பார்த்த ரசிகர்களும் நல்ல விதமாகவே விமர்சனம் சொல்லி வருகின்றனர் மேலும் வசூலிலும் நல்ல வேட்டை நடத்தி வருகிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் இந்த படத்தில் அவருடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, சூரி, சிவாங்கி, பிரியங்கா மோகன், புகழ் போன்ற மிகப்பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் டான் படத்தில் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் ஒரு பிக் பாஸ் பிரபலம் இணைய உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் பிக்பாஸ் சீசன் 5 – ல் உள்ளார் சின்னத்திரை நடிகரான ராஜு ஜெயமோகன் தான் தற்போது டான் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிகின்றன. ராஜு ஜெயமோகன் சின்னத்திரையில் கனா காணும் காலங்கள், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்தவர்.

அதில் தனது திறமையை வெளிக்காட்டி வந்ததால் தற்போது அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக பலரும் கூறுகின்றனர் மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு சிறந்த நடிப்பை வெளிப்படுத்த கூடியவர்கள் இவரும் ஒருவர் என சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களும் கூறுகின்றனர்.

rajiv jeya mohan
rajiv jeya mohan