மீண்டும் காதலில் விழுந்த பிக்பாஸ் மருத்துவ முத்தம் புகழ் ஓவியா.! இந்த தடவ என்ன முத்தம் தற போராங்களோ!!

0

சினிமாவில் நடித்தபோது அடைந்த பிரபலத்தை விட விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு உலகம் முழுவதும் பிரபலமடைந்தவர் நடிகை ஓவியா என்பது அனைவரும் அறிந்ததே. இவருக்கென ஒரு ஆர்மியே சமூக வலைதளங்களில் உருவானது அனைவரும் அறிந்ததே.

ஆனால் இந்த புகழை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் தவரவிட்டார் நடிகை ஓவியா. இவர் பிக்பாஸில் இருந்தபோது ஆரவ்வை காதலித்தார் என்பது உலகமே அறிந்தது. அதன்பிறகு அவர்களது காதல் முறிந்தது என அவர்களே கூறியிருந்தனர் . பிக்பாஸில் இருந்து வெளிவந்த பிறகு கிடைத்த பட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் தவறவிட்டார்.

இவர் நடித்த 90ml என்ற திரைப்படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த திரைப்படத்தில் இவர் மிகவும் ஆபாசமாக நடித்து அவரது இமேஜை அவரே டேமேஜ் செய்துகொண்டார்.

அதனைத்தொடர்ந்து மீண்டும் ஆரவும் ஓவியாவும் காதலில் இணைந்தது போன்ற புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலகி வந்தது. இதனை ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். பட வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் ஆரவ் மற்றும் ஓவியா இருவரும் காதலில் விழுந்து விட்டார்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.