நடிப்பு மட்டும் போதாது என புதிய அவதாரம் எடுத்த பிக்பாஸ் லாஸ்லியா!! குவியும் பாராட்டு..வேற ஆளுமா நீ…

0

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பல நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ் இந்த நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்று விளங்காதே பிரபலங்களே இல்லை என்ற அளவிற்கு போய்விட்டது உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள் ஒவ்வொரு சீசனிலும் பல வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே போகிறது.

அந்த வகையில் இந்த பிக் பாஸ் சீசன் மூலம் மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் தான் லாஸ்லியா இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படவாய்ப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது இவரது நடிப்பிலும் தற்போது ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது அவ்வாறு இவரது நடிப்பில் பிரெண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் மற்றும் இரண்டு படங்கள் இவரது நடிப்பில் உருவாகி வருகிறது.

மேலும் ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து இயக்கும் பிரெண்ட்ஷிப் திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங்குக்கு ஜோடியாக லாஸ்லியா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமையும் எனவும் பல சினிமா பிரபலங்களும் கூறுகிறார்களாம்.

இந்நிலையில் லாஸ்லியாவை பற்றி புதிதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது அதாவது திரை உலகில் இவர் நடிகையாக மட்டும் வலம் வராமல் பாடகியாகவும் அறிமுகமாகியுள்ளார் ஆம் பிரெண்ட்ஷிப் திரைப்படத்தில் இடம்பெறும் அடிச்சு பறக்கவிடுமா என்ற செம மரண குத்து பாடலை இவர் தேவாவுடன் இணைந்து பாடியுள்ளாராம்.

losliya2
losliya2

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் லாஸ்லியாவுக்கு இவ்வளவு திறமை இருக்கிறதா எங்களுக்கு வியப்பாக இருக்கிறது என கூறி வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தால் எங்கேயோ சென்று விடுவார் என இவரை உற்சாகப்படுத்தும் வகையில் கூறி வருகிறார்கள்.