உடல் எடை குறைத்து பார்ப்பதற்கு ஸ்லிம்மாக மாறிய பிக்பாஸ் காஜல்.!புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமா உலகில் ஒரு காலகட்டத்தில் துணை கதாபாத்திரத்தை ஏற்று கொண்டு நடித்து வலம் வந்தவர் தான் காஜல் பசுபதி இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார் பின்பு பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனது முகத்தை பதிய வைத்தார்.

இவர் முதலில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற திரைப்படத்தில் செவிலியராக நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக திரைப்படம் முழுவதும் நடித்திருப்பார் மேலும் சிங்கம்,மௌனகுரு,கௌரவம்,இரும்புக்குதிரை,கலகலப்பு2 போன்ற நிறைய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார்.

இவரது திருமண வாழ்க்கையில் காஜல் நடன இயக்குனரான சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் அவர்களுக்குள் ஒரு சில காரணம் குறித்து பிரிந்துவிட்டார்கள் விவாகரத்து வாங்கிய பின்னும் சாண்டியுடன் ஒரு நல்ல தோழியாக காஜல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் காஜல் சமீபத்தில் ஒரு பேட்டியில் சாண்டியின் பிரிவு பற்றி கேட்ட போது அவர் சாண்டி மிகவும் நல்ல மனிதர் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்.

எங்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் நாங்கள் இருவரும் தனியாகவே வாழ்ந்து வந்தோம் ஆனால் நாங்கள் வாழ்வதை பார்த்த பலரும் நாங்கள் லிவ்விங் டு கெதர் முறைப்படி வாழ்ந்து வருகிறோம் என நினைத்து விட்டார்கள்.

சாண்டியின் பிரிவிற்கு நான் தான் முக்கிய காரணம் ஏனென்றால் அவரை நான் அதிகம் கஷ்ட படுத்தி விட்டேன் என்று கூறி தற்போதும் அவர் மற்றும் அவரது மனைவியுடன் நல்ல உறவில் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறாராம்.

இந்நிலையில் காஜலின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் அந்த புகைப்படத்தில் காஜல் பார்ப்பதற்கு தனது உடல் எடை முழுமையாக குறைத்து விட்டார்.

இதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் அவரை வர்ணிப்பது மட்டுமல்லாமல் ஒரு ரசிகர் யாருப்பா இந்த பொண்ணு என கேட்க இன்னொருவர் எப்படி உடனே உடல் எடை குறைச்சிங்க என்று கேட்க அதற்க்கு காஜல் என்று ஷாக் கொடுத்துள்ளார்.

kajal pasupathi
kajal pasupathi

இதனையடுத்து இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment