விஜய் பட வாய்ப்பை நிராகரித்த “பிக்பாஸ் கேப்ரியல்லா”.! காரணம் தெரிந்தால் நீங்களே ஷாக்காவீங்க..

0
gaberilla
gaberilla

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பலரும் தற்போது மக்கள் மற்றும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்து காணப் படுகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் கேப்ரியல்லா.

இவர் தனது இளம் வயதிலேயே  சினிமாவிலும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தில் சுருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார் அதைத் தொடர்ந்து சமுத்திரகனியின் அப்பா திரை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் பின்பு சில இடைவேளைக்கு பிறகு மற்ற நடிகைகள் போல இவரும் ரசிகர்களை கவருவதற்காக ஃபோட்டோஷூட்டை கையில் எடுத்தார்.

அப்படி கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு எண்ணற்ற ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டார் பின் ஒரு கட்டத்தில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி நீண்டதூரம் பயணித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சினிமா வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார்.

கேப்ரியல்லா ஆனால் அவரை தேடி சீரியல் வாய்ப்பு தான் வந்தது இருந்தாலும் அதையும் ஏற்றுக்கொண்டு தற்போது விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகையாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவர் நடித்துவரும் காவியா கதாபாத்திரத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்தநிலையில் ஒரு பேட்டி ஒன்றில் கேப்ரியல்லா கூறிய சில தகவல்கள் தற்போது இணையதளத்தில் பரவி வருகின்றன அதன்படி அவர் கூறியது எனக்கு பாலா சாரின் தாரை தப்பட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது நானும் அந்த படத்தில் நடிக்க ஆசையாக இருந்தேன் ஆனால் சில காரணங்களால் பின்பு அந்த வாய்ப்பு கைநழுவி சென்றது. அதைத்தொடர்ந்து விஜய் சாரின் பிகில் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அப்போது நான் கல்லூரியில் படித்து வந்ததால் படிப்பு தான் முக்கியம் என்று அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இருந்தாலும் விஜய் சார் படத்தில் நடிக்க முடியவில்லையே என மிகவும் வருத்தப்பட்டேன் என கூறியுள்ளார். இந்த செய்தி கேபியின் நண்பர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.