பிக் பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா நடித்த மிளிர் திரைப்படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர்!!

Big Boss fame Aishwarya Dutta first Look Poster in the movie Milir: நடிகை ஐஸ்வர்யா தத்தா 2015 ஆம் ஆண்டு வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் இதை தொடர்ந்து இவர் பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

பின்னர் இதை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பெற்றார். இதில் தாடி பாலாஜியை அவர் திட்டி பேசும் வச்சி செய்வேன் என்று சொல்லும் வசனம் இன்றளவும் டிக்டாக்கில் பிரபலமாக உள்ளது.

நடிகை ஐஸ்வர்யா தத்தா சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர். இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

மேலும் பிக்பாஸில் இருந்து வெளிவந்த பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்த வண்ணமே உள்ளது. தற்போது இவர் நடிப்பில் நான்கு திரைப்படங்கள் வெளிவர உள்ளது. அந்த வகையில் நேற்று இவர் நடித்த மிளிர் என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் நாகேந்திரன் அவர்களின் இயக்கத்தில் வெளியாக உள்ளது. மேலும் சினிமா டூர் என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யாதேவி என்பவர் தயாரித்துள்ளார். இதோ அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.

 

Leave a Comment