தனது குழந்தையை முதன் முதலாக மீடியா உலகிற்கு காட்டிய “பிக் பாஸ் டேனியல்”.! கியூட் புகைப்படம் இதோ.

குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் டேனியல். சினிமாவில் எங்கேயோ ஒரு மூலையில் நடித்து வந்த இவருக்கு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் அவருக்கு துணையாக படம் முழுவதும் நடித்து அசத்தினார்.

மேலும் அந்த படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்புக்கு ஏற்றவாறு டேனியலும் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்த திரைப்படம் அவருக்கு நல்லதொரு அடித்தளத்தை கொடுத்தது.

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பல்வேறு படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார் இவர் கடைசியாக “ட்ரிப்” என்ற திரைப்படத்தில் யோகி பாபு உடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது தமிழ் சினிமாவில் உயர்ந்து கொண்டே செல்லும் நபர்களில் இவரும் ஒருவராக இருக்கிறார்.

இப்படி சினிமாவில் முன்னேறி கொண்டு இருந்தாலும்  ஒருகட்டத்தில் படவாய்ப்பு இல்லாமல் இருந்த பொழுது பிக் பாஸ் சீசன் இவருக்கு உதவியது என்றே கூறலாம் பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக பங்குபெற்று பிக்பாஸ் வீட்டில் சுமார் 77 நாட்கள் தாக்குப் பிடித்தார்.

அதன் பிறகு வெளியே வந்த இவர் தனது நீண்ட நாள் காதலியான “டெனிஷா” என்பவரை திருமணம் செய்துகொண்டு தற்பொழுது வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவரும் 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு இவர்களுக்கு குழந்தை பிறந்தது.

மனைவி மற்றும் குழந்தையை மீடியா உலகில் காண்பிக்காமல் இருந்த நடிகர் டேனியல் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர்களுடன் நின்று டேனியலும் புகைப்படம் எடுத்துக்கொண்டார் இவர்கள் மூவரும் இருக்கும் குடும்ப புகைப்படம் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்கள் பார்த்து தனது வாழ்த்துக்களையும் லைக்குகளையும் அள்ளி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment