சீரியலில் குதித்த பிக்பாஸ் பிரபலம்.! அதுவும் எந்த தொலைக்காட்சியில் எந்த சீரியலில் தெரியுமா.!

கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக சன் டிவியில் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். சன் டிவி தொலைக்காட்சி என்பது சீரியல் என்று ஒரு பெயர்போன ஒரு தொலைக்காட்சி.அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

இப்படிப்பட்ட நிலையில் இடையில் வெள்ளித்திரையில் பிரபலமடைய முடியாமல் சின்னத்திரைக்கு நடிக்க வந்த நடிகர். நடிகைகளை வைத்தும் அந்த போன கதைகளை வைத்தும் சீரியளை ஒளிபரப்பி வந்தார்கள்.எனவே சன் டிவியில் டிஆர்பியில் பெரிதும் அடி வாங்கியது. இதனை மற்ற தொலைக்காட்சிகள் பயன்படுத்திக்கொண்டு சன் டிவியை ஓவர்டேக் செய்து புதுமுக நடிகர், நடிகைகளை அறிமுகப் படுத்துவது இளசுகள் விரும்பும் வகையில் அதிக படியான காதல் காட்சிகள் இடம்பெறுவது போன்ற சீரியல்களை ஒளிபரப்பி வந்தார்கள்.

அதன்பிறகு சன் டிவியும் மற்ற தொலைக்காட்சிகள் போலவே  பல புதுமுக நடிகர் நடிகைகளை அறிமுகபடுத்தி இளசுகள் விரும்பும் வகையில் சமீப காலங்களாக புதிய சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அனைத்து சீரியல்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் முக்கியமாக ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வருகிறது.

இவ்வாறு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த இந்த சீரியலில் இருந்து ஹீரோவான அருண் சில நாட்களுக்கு முன்பு விலகிவிட்டார். எனவே இவருக்கு பதில் தற்பொழுது பிரபல நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஆம், அது வேறு யாருமில்லை வம்சம் சீரியலில் ஸ்ரீனிஷ் அரவிந்து நடிக்கவுள்ளார். ஏசியாநெட் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பணையம் என்ற தொடரின் மூலம் மலையாள சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

srinish
srinish

இதனைத்தொடர்ந்து வம்சம் சீரியலிலும் நடித்து வந்தார். என்றாலும் வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்பதற்காக மலையாளத்தில் துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 3-இல் கலந்து கொண்டார்.  இவர் எதிர்பார்த்தது போலவே நிகழ்ச்சிக்குப் பிறகு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து பூவே உனக்காக சீரியலின் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment