குக் வித் கோமாளி அஸ்வினுக்கு ஜோடியாக நடிக்கும் பிக் பாஸ் பிரபலம்.! அதுவும் நீங்கள் எதிர்பார்த்தவர் தான்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்து நபர்களும் தற்போது சினிமாவில் மிக உயரமான இடத்தில் இருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும் அதிலும் குறிப்பாக இரண்டாவது சீசனில் பங்கு பெற்ற பல பிரபலங்களும்.

தற்போது நிறைய திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வருகிறார்கள் அவ்வாறு இரண்டாவது சீசனில் பங்கேற்ற பலரும் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வருவது மக்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கிறது.

மேலும் இரண்டாவது சீசன் மூலம் பிரபலமானவர் அஸ்வின் இவரும் தற்பொழுது நிறைய திரைப்படங்களில் கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள திரைப்படத்திற்கு என்ன சொல்லப் போகிறாய் என்று தலைப்பு வைத்துள்ளார்கள் அதுமட்டுமல்லாமல் ஹரிஹரன் இயக்கவுள்ள இந்த திரைப்படத்தில் அஸ்வினுடன்  இணைந்து குக் வித் கோமாளி புகழும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் அஸ்வினுக்கு ஜோடியாக இளம் நடிகை தேஜ் அஸ்வினி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆனால் இவர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலான அஸ்கு மாரோ பாடலில் கவின் உடன்  இணைந்து நடனம் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ashwin2
ashwin2

இதனை வைத்து பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் அஸ்வினுக்கு ஜோடியாக நடித்தார் என்றால் படம் நன்றாக இருக்கும் அதுமட்டுமல்லாமல் அஸ்வினும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது என கூறி வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் அஸ்வின் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் அவர் மிகப் பெரிய நடிகராக வலம் வர வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment