விஜய், ராஷ்மிகா மந்தனா சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்து பொறாமைப்பட்ட பிக்பாஸ் பிரபலம்.! என்ன சொல்லி இருக்காரு பாருங்க..

vijay
vijay

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான பீஸ்ட் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது இதனை அடுத்து பீஸ்ட் படத்தின் டிக்கெட் புக்கிங் ஜோராக நடைபெற்று வருகிறது. மேலும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பீஸ்ட் படத்தின் எதிர்பார்ப்பு வேற லெவலில் உள்ளது.

இதனால் இந்த திரைப்படம் வெளியாகி மக்களை சென்று அடைந்து நல்ல வசூல் வேட்டை நடத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் அடுத்து வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் விஜய் 66 திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்த படத்தின் பூஜை கூட அண்மையில் நடைபெற்றது அதில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், இயக்குனர் வம்சி, தமன் போன்ற பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த படத்தின் பூஜை தொடங்கப்பட்ட புகைப்படங்களும் பல இணையதளத்தில் வெளியாகியது.

வம்சி இயக்கியுள்ள இந்த படத்திற்கு விஜய்க்கு ஜோடியாக ஹீரோயின் பல நாட்களாக தேடப்பட்ட நிலையில் பல நடிகைகள் பெயரும் அடிபட்டது ஆனால் கடைசியாக படக்குழு ராஷ்மிகா மந்தனாவை கமிட் செய்துள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்யின் தீவிர ரசிகை ஆவார் அதனால் விஜயுடன் சேர்ந்து நடிக்க உள்ளதால் செம குஷியில் உள்ளார்.

kajal
kajal

மேலும் விஜய்யின் 66 வது படத்தின் பூஜையின்போது விஜயுடன் இணைந்து பல க்யூட் புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் தான் தற்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாக்கி வருகின்றன இந்த நிலையில் நடிகை மற்றும் பிக்பாஸ் பிரபலமான காஜல் பசுபதி விஜயுடன் ராஷ்மிகா மந்தனா எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது சோசியல் மீடியாவில் பதிவிட்டு “தள்ளி நில்றி” என கமெண்டை பதிவிட்டுள்ளார்.இது குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கும் வயிறு எரியுது எனவும் கமெண்டில் தெரிவித்துள்ளார்.