பிக்பாஸ் பிரபலம் மகத்திற்கு குழந்தை பிறந்தது.! என்ன குழந்தை தெரியுமா தனது குடும்பத்துடன் அவரே வெளியிட்டுள்ள புகைப்படம்.!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்கள் சினிமாவில் பிரபலமடைய முடியாமல் தவித்து வரும் பலருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது அந்த வகையில் ஒன்றுதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்போது சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஒருவர் தான் மகத். இவரை இந்நிகழ்ச்சியின் மூலம் பலர் பொம்பள பொறுக்கி என பலவற்றை சொல்லி இவரை திட்டி வந்தாலும் அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. இவ்வாறு நடிகரும் சிம்புவின் நண்பருமான மகத் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து பல திரைப் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

அந்தவகையில் இந்த வருடம் மட்டும் கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, இவன்தான் உத்தமன், காதல் கண்டிஷன் அப்லே, சைக்கிள் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த சில மாதங்களிலேயே தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார்.

அதோடு தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களையும் தொடர்ந்து தனது சோசியல் மீடியா வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்துவந்தார். இப்படிப்பட்ட நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும் சில நாட்களில் குழந்தை பிறக்க உள்ளதாகவும் அவருடன் சேர்ந்து ஒரு போட்டோ ஷூட்டை நடத்தியிருந்தார்.

அந்த வகையில் இன்று மகத்திற்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.  மகத் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் எமோஷனலான பதிவுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுவுள்ளார். எனவே பலரும் மகத்திற்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

mahath 3
mahath 3

Leave a Comment