தளபதி 65 திரைப்படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்.! அதிர்ஷ்டம் கூரையை பிச்சிகிட்டு கொட்டுது என்பார்களே அது இதுதானா.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்து வருபவர் தளபதி விஜய். கடைசியாக இவர் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றது. அந்த வகையில் இத்திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து தளபதி விஜய் தனது 65வது படத்திற்கான முதற்கட்ட வேலையை தூங்கியுள்ளார். அந்த வகையில் தளபதி 65 திரைப்படத்தின் புதிய அப்டேட்கள் பல இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில்  பிரபல விஜய் டிவியின் மூலம் பலர் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சீரியல் நடிகராக அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் இளம் நடிகர்களில்  முன்னணி நடிகராக கலக்கி வரும் ஒருவர் தளபதி 65 திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.

தளபதி 65 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாம் இதனைத்தொடர்ந்து நெரிசல் இயக்கவுள்ளார்.  தளபதி விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனாவும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதியாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் விஜய் டிவியில் தொகுப்பாளராகவும், சீரியல் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் கவின். இவர் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார். இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ஏராளமான படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்த வகையில் தயாரிப்பாளரான நெல்சனின் நீண்டநாள் நண்பர் தான் கவின். இதன் மூலம் இவருக்கு தளபதி 65 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்ற தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. அதுமட்டுமல்லாமல் கவின் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் திரைப்படத்திலும் நடித்து வருகிறாராம்.

இந்த இரண்டு தகவல்களும் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை அதிகாரபூர்வமான தகவல் வெளிவரும் வரை காத்திருக்கவும். ஆனால் தளபதி 65 திரைப்படத்தின்  பூஜையில் கவின் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தான் இவர் தளபதி 65 திரைப்படத்தில் கவின் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

kavin
kavin

Leave a Comment