விஜய் டிவி சீரியலில் நடிக்கப் போகும் பிக்பாஸ் பிரபலம் கேப்ரியலா – வெளியான புகைப்படம்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரபலங்கள் பலரும் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டியவுடன் அவர்கள் பட வாய்ப்பை கைப்பற்ற டாப் நடிகைகள் போல அவர்களும் செய்யும் லூட்டிகள் கொஞ்ச நஞ்சமல்ல அந்த வகையில் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான 3.

படத்தில் சுருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்து சினிமாவுலகில் என்ட்ரி ஆனவர் நடிகை கேப்ரியலா. அதன்பின் இவர் அப்பா என்ற படத்தில் நடித்து மக்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றார் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 – ல் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார்.

உள்ளே சென்ற அவர் தன்னுடைய சிறந்த பங்களிப்பை அவர் கொடுத்து இருந்தாலும் அவர்களை விட மற்றவர்கள் சிறப்பாக வீட்டில் பயணித்தார்கள். அதை உணர்ந்து கொண்டு கேப்ரில்லா ஐந்து லட்சத்தை தூக்கிக் கொண்டு வெளியேறினார். இது நல்ல விஷயம் தான் எனக் கூறி அவரை மக்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்தியதோடு மட்டுமில்லாமல் அவரை பின்தொடரவும் ஆரம்பித்தாராம்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை பின்தொடரும் எண்ணிக்கை அதிகமானதால் அவரும் இன்ஸ்டா பக்கத்தில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு தனது அழகை தாறுமாறாக காட்ட ஆரம்பித்தார் இதன் மூலம் பட வாய்ப்பு கிடைக்கும் என கருதப்பட்டது. ஆனால் அவருக்கு அது ஏமாற்றத்தையே இதுவரையும் கொடுத்து வருகிறது.

ஆம் பட வாய்ப்பு அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி தற்போதே கிடைக்கவில்லை இருப்பினும் அவருக்கு விஜய் டிவியில் ஈரமான ரோஜா இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதன் புகைப்படங்கள் கூட தற்போது இணைய தள பக்கத்தில் தீயாய் கசிகின்றன இதோ நீங்களே பாருங்கள்.gaberilla

Leave a Comment