பிக்பாஸ் பிரபலம் நடிகை சுஜா வருணி சன் டிவி சீரியலில் நடிக்க போகிறார் – எந்த சீரியல் தெரியுமா.? உற்சாகத்தில் இளசுகள்.

0
suja-varuni
suja-varuni

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் படிப்படியாக கெஸ்ட் ரோல், ஐட்டம் டான்ஸ், ஹீரோயின் என அனைத்து விதமான ரோல்களிலும் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி மக்களை மகிழ்வித்தார் நடிகை சுஜா வருணி. சினிமாவுலகில் தமிழை தாண்டி இவர் கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் தொடர்ந்து பட வாய்ப்பை அள்ளியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் 2005 இல் இருந்து 2010 வரை இவர் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தி மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தவர். அதன் பின் அவ்வப்போது ஓரிரு திரைப்படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் சிவாஜியின் பேரன் தேவ் என்பவரை காதலித்து வந்த நிலையில் ஒருகட்டத்தில் திருமணம் செய்துகொண்டார் இவர்கள் இருவருக்கும் தற்போது ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுஜா வருணி சினிமா உலகில் தற்போது பெருமளவு ஈடுபாடு இல்லை என்றாலும் டிவி ஷோக்களில் பெரிதும் கலந்து கொண்டு கலக்கியுள்ளார். அந்த வகையில் விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திறமையை வெளி காட்டிய அசத்தினார்.

பிக்பாஸ் வீட்டில் பயணித்துக் கொண்டிருக்கும்போது ஒரு தடவை எனக்கு அப்பா இல்லை என்ற வருத்தம் இருக்கிறது நான் ரொம்ப மிஸ் செய்கிறேன் என கூறினார் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு உடனடியாக உலக நாயகன் கமலஹாசன் சுஜா வருணியை  வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் சிறப்பாக ஓடிக்கொண்டிருந்த சுஜாவாருணி தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சன் டிவியில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் அன்பே வா சீரியலில் ஸ்பெஷல் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது.