“பீஸ்ட்” படத்தை விமர்சிப்பவர்களுக்கு தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்த பிக்பாஸ் ஆரி.! ஹாப்பியான விஜய் ரசிகர்கள்.

0
beast-
beast-

நடிகர் விஜய் சமீப காலமாக நடித்து வரும் திரைப்படங்கள் அனைத்தும் இளம் இயக்குனர்களின் கூட்டணியிலேயே அமைகின்றன அப்படி அட்லியுடன்  கைகோர்த்து மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்களை கொடுத்து இருந்தார். லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து மாஸ்டர் என்ற ஹிட் படத்தை கொடுத்தார்.

அந்த வரிசையில் கடைசியாக கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற சிறப்பான படங்களை கொடுத்த நெல்சன் உடன் கைகோர்த்து பீஸ்ட் என்ற திரைப்படத்தை அண்மையில் கொடுத்திருந்தார். விஜய் படம் வெளிவருகிறது என்றால் ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பார்கள்.

ஏனெனில் விஜய்க்கு என்று தனி ஸ்டைல் இருக்கும் ஆனால் இந்த பீஸ்ட் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுவதும் பூர்த்தி செய்யவில்லை படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனத்தை பெற்று வருகின்றன. ஆனால் வசூலில் குறைச்சல் இல்லாமல் நடந்து வருகிறது. மேலும் சினிமா பிரபலங்கள் பலரும் தற்போது இந்தப் படத்தைப் பற்றியே அதிகம் பேசி வருகின்றனர்.

அப்படி அண்மையில் நடிகரும் பிக்பாஸ் பிரபலமான ஆரி ஒரு நிகழ்ச்சியில் பீஸ்ட் படத்தைப் பற்றி ஏன் இவ்வளவு பேச்சு? சினிமா திட்றவனையும் வாழவைக்கும் பாராட்டுறவனையும் வாழவைக்கும் அந்த சினிமாவை வைத்து யூடியூபில் நிறைய பேர் சம்பாதிக்கிறாங்க அதனால் சினிமாவை பற்றி கேவலமாக பேசாதீர்கள் என கூறினார்.

ஒரு படம் சரியில்லை என்பதற்காக மொத்த சினிமாவையும் குறை சொல்லக்கூடாது பல நல்ல படங்களை தந்ததும் இந்த சினிமாதான். அதனால் குறை சொல்வதை நிறுத்தி விட்டு இன்னும் தரமான படம் எப்படி எடுக்க வேண்டும் என்ற விவாதத்தை தான் முன் வைக்க வேண்டுமே தவிர ஒட்டுமொத்த சினிமாவயும் குறை சொல்லக் கூடாது என பேசியுள்ளார்.