பெண்கள் என்றால் உனக்கு இளக்காரமா போச்சா..! பிரபல யூட்யூபரை நடுரோட்டில் வைத்து அறைந்த பிக் பாஸ் நடிகை..!

தெலுங்கு மொழியில் பல்வேறு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் கராத்தே கல்யாணி இவ்வாறு பிரபலமான நமது நடிகை தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் நடித்தது மட்டுமில்லாமல் பல சீரியல்களிலும் தன்னுடைய நடிப்பு திறனை வெளிகாட்டியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சமிபத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு ரசிகர்களை பெருமளவு கவர்ந்தது மட்டும் இல்லாமல் பல்வேறு வாய்ப்புகளையும் பெற்றுள்ளார். அந்தவகையில் இவர் தெலுங்கு பக்கம் சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை ஆவார்.

இந்நிலையில் நமது நடிகை கடந்த வியாழக்கிழமை அன்று ஹைதராபாத் அருகில் உள்ள பகுதி ஒன்றில் பிரபல யூடியூபர் ஒருவரை பார்த்தவுடன் ஆத்திரமடைந்து நடுரோட்டில் கன்னத்தில் அறைந்துள்ளார். இவ்வாறு அடிக்கும் போது ஏன் பெண்களை யூடியூப் சேனலில் தவறாக பேசுகிறாய் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் இவர்கள் இருவருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது மட்டுமில்லாமல் பின்னர் அந்த வாக்குவாதம் முற்றி கல்யாணியை யூடியூபர் கன்னத்தில் அறைய ஆரம்பித்துவிட்டார்.  இதனால் இருவருக்கும் கடும் சண்டை ஏற்பட்டது மட்டும் இல்லாமல் நடுரோட்டில் இவர்கள் இருவரும் அடித்துக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

kalyani-1

மேலும் இவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டதை  வீடியோ எடுத்துக் கொண்டது மட்டுமில்லாமல் சமீபத்தில் யூடியூபர் கல்யானி மீது புகார் அளித்தது மட்டுமில்லாமல் கல்யாணியும் யூடியூபர் ரெட்டி மீதும் புகார் அளித்துள்ளார்.

இவ்வாறு இந்த பிரச்சனையை கையில் எடுத்த போலீஸ் அதிகாரிகள் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருவது மட்டுமில்லாமல் இவர்கள் அடித்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி மிக வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment