கண்ணான கண்ணே சீரியலில் நடிக்க வரும் பிக்பாஸ் பிரபலம்.! சும்மாவே அடிக்கிற மாதிரி தான் இருப்பாரு.! அந்த பிரபலம் யார் தெரியுமா.?

சமீப காலமாக வெள்ளித்திரையும் தாண்டி சின்னத்திரையும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கு முக்கிய காரணம் தொலைக்காட்சிகளில் இல்லத்தரசிகளை கவரும்படியான சிறப்பான சீரியல்களை கொடுப்பது காரணம் என சொல்லப்படுகிறது அந்த வகையில் சன் டிவியில் பல புதுவிதமான சீரியல்களை கொடுத்து டி ஆர் பி எல் நம்பர் 1 ஆக தற்போது வரையிலும் வலம் வருகிறது.

தற்பொழுது சன் டிவியில் வெற்றி நடை கண்டு வருவதுதான் கண்ணான கண்ணே சீரியல். இந்த சீரியல் அப்பா மகள் இருவருக்கும் இடையே இருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் மற்றும் காதல் போன்றவற்றை இந்த சீரியல் சிறப்பாக கையாளுவதால் இது மக்களையும் தாண்டி தற்போது காதல் ஜோடி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ராகுல் ரவி, நிமிஷிகா மற்றும் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து வந்த பப்லு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளதால் மக்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் இப்படியிருக்க இந்த சீரியலில் ஒரு பிக் பாஸ் பிரபலம் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அந்த பிரபலம் பிக்பாஸ் வீட்டில் தனது திறமையை காட்டி மற்றவர்களை நடு நடுங்கச் செய்த நடிகை காஜல் பசுபதி தான்.இந்த தொடரில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறாராம். தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டியவர் தற்போது பட வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் அடியெடுத்து வைத்துள்ளார்.  போலீஸ் கதாபாத்திரத்தில் மிரட்ட ரெடியாக இருக்கிறாராம்.

இந்த நிலையில் படப்பிடிப்பின்போது நடிகர் பப்லு மற்றும் காஜல் ஆகிய இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை நடிகர் பப்லு தனது இன்ஷா பக்கத்தில் வெளியிட்டார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வாங்க மேடம் என கூறியே கமெண்ட் அடித்து வருகின்றனர் மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கண்ணான கண்ணே சீரியலில் காஜல் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

kajal and booblu
kajal and booblu

Leave a Comment