தளபதி விஜய் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 30% முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
மேலும் தளபதி 66 திரைப்படத்தை தில் ராஜி அவர்கள் தயாரித்து வருகிறார் இதன் முதற்கட்டப் பணிகள் ஹைதராபாத்தில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு நடைபெற்றுவந்தது இந்த நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்ததாக இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ரெடியாகி வருகிறது. மேலும் படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் விஜய்க்கு அண்ணனாக ஷாம் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் விஜய்க்கு அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார் இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப பாங்கான திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் படத்தில் சங்கீதா, யோகி பாபு, நடிகர் திலகம் பிரபு ஆகியோர்கள் இணைந்துள்ளதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்பொழுது பிரகாஷ்ராஜ், ஜெயசுதா இவர்களும் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் மேலும் 5 பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் இணைந்து உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் கூட்டு குடும்ப கதை என்பதால் பல நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்திற்கு தேவைப்பட்டுள்ளது அதனால்தான் அடுத்தடுத்து பல நடிகைகள் இணைந்து வருகிறார்கள் இந்த நிலையில் தற்போது சங்கீதா இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சம்யுக்தா தளபதி 66 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் என்ன கதாபாத்திரம் என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை விரைவில் அதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.