மீண்டும் ஒன்று கூடிய பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் எங்கு தெரியுமா.? யார் யார் இருக்காங்க பாருங்க..

priyanka raju
priyanka raju

சின்னத்திரையில் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சி. மக்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தன இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்கள் வரை முடிவடைந்துள்ளன. மேலும் இந்த ஐந்து சீசன்களையுமே கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடைசியாக நிறைவுபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்ட பல பிரபலங்களும் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமடைந்து காணப்படுகின்றன. இந்த ஐந்தாவது சீசனில் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை ராஜு ஜெயமோகன் பெற்றார். அவரைத் தொடர்ந்து 2வது இடத்தில் பிரியங்கா மற்றும் அடுத்தடுத்த இடத்தில் பாவணி அமீர் போன்றோர் பிடித்திருந்தனர்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில முக்கிய பிரபலங்களை வைத்து பிக்பாஸ் அல்டிமேட் என ஹாட்ஸ்டார் இல் 24 மணி நேரமும் லைவாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்துகொண்ட அபிநய், சுருதி, தாமரைச்செல்வி, நிரூப் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த பிக் பாஸ் அல்டிமேட்டில் அபிநய் வெளியேறிய நிலையில் நிரூப், சுருதி, தாமரை, போன்றவர்கள் மிக சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ்  சீசன் 5 முடிவடைந்த பிறகு பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்டு உள்ளனர்.

இதனையடுத்து அப்பப்போ சில பிரபலங்கள் நேரில் சந்தித்து அவர்கள் எடுத்துக்கொண்ட  புகைப்படங்களை இணைய தளத்தில் பதிவிட்டு வந்தனர். அந்த வகையில் தற்போது பிரியங்கா, அபிஷேக், பாவனி, வருண், சிபி போன்றவர்கள் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட ஜாலியான புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதனை பிரியங்கா அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.