தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சூர்யாவுக்கு இப்பொழுதும் சினிமா உலகில் நல்ல வரவேற்பு இருக்கிறது ஏன் அண்மையில் இவர் நடித்த ஜெய்பீம் திரைப்படம். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் பல விருதுகளையும் குவித்து வருகிறது.
நடிகர் சூர்யாவின் சினிமா கேரியரில் ஒரு முக்கியமான படமாக ஜெய் பீம் திரைப்படம் இப்பொழுது அமைந்துள்ளது. பின்பு பல்வேறு இயக்குனர்களுடன் கதை கேட்டு தற்போது கமிட்டாகியுள்ளார். அதில் முதலாவதாக இயக்குனர் பாண்டி ராஜ்வுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையமாக வைத்து எடுத்துக் உள்ளதால் இந்த அவலத்தைக் காண மக்கள் மற்றும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி உள்ளனர். இந்த படத்தில் டாக்டர் பட நடிகை பிரியங்கா அருள் மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
மற்றபடி இந்த படத்தில் இருந்து பெரிதாக எந்த நடிகை நடிகர்கள் நடிக்கின்றனர் என்பது வெளிவராமல் மறைமுகமாக வைத்துள்ளது படக்குழு. இப்படி இருக்கின்ற நிலையில் ஒரே ஒரு தகவல் நமக்கு கிடைத்துள்ளது அதாவது அண்மையில் நடந்த பிக் பாஸ் சீசன் 5யில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்த சிபி எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்போது ரசிகர்களின் கேள்வி என்னவென்றால் சிபி பிக்பாஸ் முன்னராகவே இந்த படத்தில் நடித்துள்ளாரா அல்லது வெளிவந்தபின் நடித்துள்ளாரா என்பது தான். எது எப்படியோ படம் பிடித்தால் போதும் என கூறி சிபி மற்றும் சூர்யா அவர்களை இப்பொழுதே வாழ்த்த தொடங்கியுள்ளனர்.