பிக்பாஸ் 5 போட்டியாளர் “அக்ஷரா ரெட்டி”.! விஜய் டிவியில் இதற்கு முன் அவர் கலந்துக்கொண்ட ஷோ எது தெரியுமா.? சொன்ன ஆச்சரியப்படுவிங்க..

தமிழில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது கோலாகலமாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அதில் ஒருவரான நமிதா மாரிமுத்து சில தவிர்க்க முடியாத காரணத்தால் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர்.

மற்ற போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடிக் கொண்டு வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் முதல் போட்டியாக கடந்து வந்த பாதை என்ற டாஸ்கில் அனைவரும் அவர்களது வாழ்க்கையில் மறக்க முடியாத சில சம்பவங்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அதிலும் ஒரு சிலருடைய வாழ்க்கை வரலாறு மக்களை கண் கலங்க வைத்தன.

இந்த வீட்டில் உள்ள போட்டியாளர்களில் சிலர் முகம் நமக்கு இந்த நிகழ்ச்சிக்கு முன் பரிட்சயமான முகம் மற்றும் சில முகங்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் நமக்கு தெரியும். அதன்படி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான அக்ஷரா ரெட்டி பிக் பாஸ் விட்டில் இவரின் அழகான பேச்சு மற்றும் திறமையால் ரசிகர்களை தன் பக்கம் திருப்பி வருகிறார்.

அக்ஷரா ரெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் முன் ஒரு முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளார். அது எந்த நிகழ்ச்சி என்று எத்தனை பேருக்கு தெரியும். அவர் இதற்கு முன் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வில்லா டு வில்லேஜ் என்ற வெற்றியடைந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மேலும் இவர் winner of the beauty pageant miss global (2019) என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். இதன்மூலம் ஓரளவிற்கு பாப்புலரான இவர் தற்போது மேலும் தன்னை பிரபல படுத்திக்கொண்டு சினிமாவில் வாய்ப்புகளை பெற பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.

Leave a Comment