பும்ராவின் திருமணதிற்கு மும்பை இந்தியன்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ்.! வைரலாகும் வீடியோ

வெள்ளித்திரையில்  இந்திய கிரிக்கெட் வீரர் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை பற்றி ஒரு தகவல் சமிபத்தில் வேகமாக வைரலாகி வந்தது அந்த தகவலில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல தொகுப்பாளினி சஞ்சன கனேசன் என்பவரை திருமணம் செய்யப் போவதாக கூறி வந்த நிலையில் கடந்த 15.3.2021 கோவாவில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக உறவினர்கள் மட்டும் இவர்களது திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்கள் மேலும் சஞ்சன கனேசன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் நாங்கள் இருவரும் புதிய பயணத்தை தொடங்கி உள்ளோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் இவர்களது திருமணம் குறித்து ரசிகர்கள் மற்றும் பல சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வந்தார்கள்.

இந்நிலையில் பும்ராவிற்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் அவரது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்கள்.

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பும்ராவின் திருமண புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்கள். மேலும் பும்ராவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

இந்த வீடியோ பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

Leave a Comment