பவானி – அமீரை சேர்த்து வைக்க.. இப்பவே கேவலமான வேலை பார்த்த விஜய் டிவி..! வீடியோவை பார்த்து பொங்கி எழுந்த ரசிகர்கள்.

தமிழில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் சீசன் சீசன் ஆக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கடந்து முடிந்த பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் பிரபல ஜோடிகளாக காணப்பட்டவர் அமீர் மற்றும் பாவனி. பாவனி சின்னத்திரை சீரியல் நடிகை ஆவார். அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர்.

இந்த சீரியலுக்கு பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிக் பாஸ் 5 யில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். அப்போது அந்த சீசனில் வைல்டு கார்டு என்ட்ரி ஆக நடன கலைஞர் அமீர் கலந்து கொண்டு பாவனியிடம் காதலை தெரிவித்து இருந்தார். பாவனி அமீரின் காதலை மறுத்து இருந்தாலும் அமீருடன் கொஞ்சி கொலாவி கொண்டு தான் இருந்தார்.

இப்படி சென்று கொண்டு இருக்கையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகும் இருவரும் பொது இடங்களுக்கு ஒன்றாக ஊர் சுற்றி வந்தனர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியிலும் ஜோடியாக சேர்ந்து நடனமாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியிலும் அமீர் பாவனிக்கு ப்ரபோஸ் செய்தார் அப்போது பாவனி மிகவும்..

எமோஷனல் ஆகி எனக்கு இன்னும் டைம் வேண்டும் என அமீரிடம் கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ள பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவனி ஜோடி திருமண மணமக்கள் போன்று தயாராகி வந்துள்ளனர். அமீர் பாவனி கழுத்தில் தாலி கட்டி திருமணத்தில் நடக்கும் சில சடங்குகளும் நடைபெற்றது.

இதை அங்கிருந்த பிரியங்கா முதல் கொண்டு பலரும் மிகுந்த மகிழ்ச்சியில் கண்டு களித்தனர். ஆனால் இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக கமெண்ட்களை பெற்று வருகின்றன. அமீர் பவானி ஜோடிக்கு விஜய் டிவி நல்ல மாமா வேலை பார்த்து வருகிறது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Leave a Comment