அச்சு அசல் “குந்தவை” போலவே தோற்றம் அளிக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம்..! இதோ புகைப்படம்..

இயக்குனர் மணிரத்தினம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை படமாக இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார் இந்த படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது. 500 கோடி பொருட் செலவில் லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து தயாரித்துள்ளது.

பல மொழிகளில் வெளியாகிய பொன்னியின் செல்வன் திரைப்படம் மக்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் எதிர்பார்த்தது போலவே நல்ல விமர்சனங்கள் மற்றும் வசூலை அள்ளி வருகின்றன. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி போன்ற பல பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதில் படத்திற்கு மிகவும் வலு சேர்க்கும் வகையில் குந்தவி கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடித்திருந்தார். திரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக தோற்றமளித்துள்ளார் மற்றும் சிறப்பாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா உலகில் இருக்கும் பல நடிகைகளும் குந்தவி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்டனர்.

ஆனால் அந்த வாய்ப்பு என்னவோ திரிஷாவுக்கு தான் கிடைத்தது. இந்த நிலையில் குந்தவி கதாபாத்திரத்தில் திரிஷா நடித்ததற்கு ஒரு பக்கம் பலரும் வாழ்த்து கூறி வருகின்ற நிலையில் மறுபக்கம் சிலர் குந்தவி போலவே உடை மற்றும் நகை அலங்காரம் செய்து போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அது போல் தற்போது விஜய் டிவியில் பிரபல சீரியல் ஆக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் லிஷா குட்டி குந்தவி போல் அலங்காரம் செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் லைக்குகளையும் கமெண்ட்களையும் அள்ளித் தெளித்து வருகின்றனர் இதோ அந்த புகைப்படம்..

Leave a Comment