பாரதி கண்ணம்மா சீரியலில் இன்னும ட்விஸ்ட் இருக்கு.. திடீரென என்ட்ரி கொடுத்த பிக்பாஸ் பிரபலம் – இதோ புகைப்படம்..

தமிழில் வருடம் தோறும் சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முகம் தெரியாத பல பிரபலங்கள் கலந்து கொண்டு தமிழ் மக்கள் மற்றும் ரசிகர்கள் இடையே பரீட்சயமாகியுள்ளனர். அதில் ஒருவர் தான் தாமரைச்செல்வி. இவர் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர்.

இவர் மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து மேடை நாடகங்களில் நடித்து வந்தவர். ஒரு கட்டத்தில் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்துள்ளது ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டில் ஒன்னும் தெரியாமல் இருந்து வந்தாலும் போகப் போக சிறப்பாக விளையாடி பல ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டவர். இதைத்தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சூப்பராக விளையாடினார்.

மற்றும் அவரது கணவர் பார்த்தசாரதியுடன் இணைந்து bb ஜோடிகள் நிகழ்ச்சியிலும் நடனமாடி புகழ்பெற்றார். இந்த நிலையில் வெள்ளி திரையிலும் ஒரு சில படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் தாமரைச்செல்வி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.  மக்கள் பலரின் ஃபேவரிட் சீரியல்களில் ஒன்றான பாரதிகண்ணம்மா..

இந்த தொடர் தற்போது பலரும் எதிர்பார்த்த முக்கிய திருப்புங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பாரதி நீண்ட வருடங்களுக்குப் பிறகு கண்ணம்மாவை புரிந்து கொண்டு தன் தவறை உணர்ந்து கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டு சேர்ந்து வாழ கெஞ்சி வருகிறார். மறுபக்கம் வெண்பாவின் தில்லு முல்லு எல்லாம் தெரிய வர அவரை போலீஸ் கைது செய்துள்ளது.

இப்படி பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரின் ஹீரோ ஹீரோயின் உடன் பிக் பாஸ் தாமரைச்செல்வி தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. தாமரைச்செல்வி இந்த சீரியலில் நடிக்க வருவது உறுதி ஆனால் அவர் எந்த ரோலில் நடிக்கப் போகிறார் என தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம்..

thamarai
thamarai

Leave a Comment